சமூக ஊடகங்களை அதிரச்செய்த அரச அதிகாரி
Related Articles
சமூக ஊடகங்களை அதிரச்செய்த அரச அதிகாரி
நீர்கொழும்பு அபிவிருத்தி குழு கூட்டத்தில் கம்பஹா மாவட்ட வனவள அதிகாரி சுற்றாடலை பாதுகாப்பது தொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கைகள் பலராலும் பேசப்பட்டது. இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த உள்ளிட்டோர் முன்னிலையில் அவர் தனது நிலைப்பாட்டை உறுதியாக தெரிவித்தார்.
இது தொடர்பாக சமூக ஊடகங்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிட ஆரம்பித்தன. 14 ஹெக்டர் கொண்ட நீர்கொழும்பு சின்னடி தோட்டம் தீவு தொடர்பான பிரச்சினை 2014ம் ஆண்டு ஏற்பட்டது. வனவள பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான இப்பகுதியில் கடலான செடிகளை வெட்டி விளையாட்டு மைதானம் ஒன்றை அமைக்க கடந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. அப்போது கடற்றொழில் அமைச்சராகவிருந்த விஜித் விஜயமுனி சொய்சாவின் வழிக்காட்டலில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இது அரசாங்கத்துக்கு சொந்தமான காணியென்பதால் விளையாட்டு மைதானம் ஒன்றை அமைப்பதற்காக கம்பஹா வனவள பாதுகாப்பு அதிகாரிகள் நீதிமன்ற நடவடிக்கைகளை எடுக்க முன்வந்தனர். இதன் அடிப்படையில் கடற்றொழில் திணைக்களம் தீவில் கொட்டப்பட்டிருந்த மண்னை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இங்கு கம்பஹா மாவட்ட வனவள அதிகாரி தேவானி ஜயதிலக்க இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த முன்னிலையில் கடலான சுற்றாடலை பாதுகாப்பதற்கு இந்த வளவை விளையாட்டு மைதானம் அமைக்க வழங்க முடியாது என உறுதியாக தெரிவித்தார். அங்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.