fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பொதுமன்னிப்பு காலப்பகுதியில் முப்படையை சேர்ந்த 8 ஆயிரத்து 18 பேர் மீண்டும் சேவைக்கு..

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 13, 2020 12:52

பொதுமன்னிப்பு காலப்பகுதியில் முப்படையை சேர்ந்த 8 ஆயிரத்து 18 பேர் மீண்டும் சேவைக்கு திரும்பியுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. சட்டவிரோதமாக முப்படையிலிருந்து இடைவிலகியவர்களுக்கு கடந்த 5ம் திகதி மீண்டும் சேவையில் இணைவதற்கு அல்லது சேவையிலிருந்து சட்டப்பூர்வமாக விலகுவதற்கான பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டது.

இலங்கையின் 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட பொதுமன்னிப்பு காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் குறித்த காலப்பகுதியில் அதிகளவானோர் பணிக்கு திரும்பியுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் ச்சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை பொதுமன்னிப்பு காலத்திற்கு இணைவாக, சட்டவிரோத துப்பாக்கிகளை கையளிப்பதற்கென வழங்கப்பட்டிருந்த கால எல்லையும் நேற்றுடன் நிறைவடைந்துள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் ச்சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 13, 2020 12:52

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க