கொரோனா வைரஸை கொவிட் 19 என உத்தியோக பூர்வமாக பெயரிட உலக சுசுகாதார தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. கொரோனா வைரஸ் 2019 ஆம் ஆண்டில் பரவ தொடங்கியதை அடுத்து அதற்கு கொவிட் 19 என பெயரிட்டதாக உலக சுகாதார தாபனம் அறிவித்துள்ளது.
எந்தவொரு இடத்தினதும் கால்நடையினதும் நபரினதோ, அல்லது ஒரு குழுவையோ அடையாளப்படுத்தும் பெயர் இதற்கென பயன்படுத்தப்படவில்லையெனவும் அவ் அமைப்பு தெரிவித்துள்ளத.
இதுவரை இவ்வைரஸ் தாக்கத்தினால் 44 ஆயிரத்து 653 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1113 பேர் உயிரிழந்துள்ளனர;. இதேவேளை ஜப்பான் கப்பல் ஒன்றில் இருந்து இவ்வைரஸ் தாக்கத்திற்குள்ளான மேலும் 39 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இதற்கமைய ஜப்பான் கப்பலில் இருந்த 175 பேர் இவ்வைரஸ் தாக்கத்திற்குள்ளாகியிருந்தனர். இவ்வைரஸிற்கு உரிய சிகிச்சை முறையை கண்டறியதவதற்காக மேலும் 18 மாத காலம் செல்லும் என உலக சுகாதார தாபனம் தெரிவித்துள்ளது.
இவ்வைரஸை ஒழிப்பதற்கான சிகிச்சை முறைகளை கண்டறிவதற்கு தொழில்நுட்ப உதவியை சீனாவிற்கு வழங்க தீர்மானிக்கப்பட்ட போதிலும் எந்தவொரு புதிய கடன்களையும் வழங்க போவதில்லையென உலக வங்கி அறிவித்திருந்தது. இந்த வைரஸ் பயங்கரவாத அமைப்பொன்றையோ பயங்கரவாத செயல்பாடுகளையோ விட மோசமான முறையில் உலகம் பூராகவும் பரவியுள்ளதாக உலக சுகாதார தாபனம் மேலும் தெரிவித்துள்ளத.
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளாகியதாக சந்தேகத்தின் பேரில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 15 பேர் தற்போது நாடு பூராகவுமுள்ள ஒரு சில வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களது உடல் நிலை தேறி வருவதாக சுகாதாரஅமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் பொறுப்பாளர் தொற்று நோய் நிபுணர் டொக்டர் சுததத் சமரவீரதெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸிற்கு உள்ளாகி IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சீன பெண்மனியினதும் உடல் நிலை தேறியுள்ளதாக அற்pவிக்கப்படுகின்றது.