fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போக்களின் நாளாந்த வருமானம் அதிகரிப்பு

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 12, 2020 12:25

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போக்களின் நாளாந்த வருமானம் அதிகரித்துள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. சபைக்கு சொந்தமான 107 டிப்போக்களில் 12 டிப்போக்களை தவிர ஏனைய 95 டிப்போக்களின் ஊடாக கடந்த மாதத்தில் மாத்திரம் வருமானம் அதிகரித்துள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. நாளொன்றுக்கு ஒன்றரை இலட்சம் ரூபா தலா ஒரு டிப்போவின் ஊடாக கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்நிலையில் தற்போது நட்டத்தை எதிர்கொண்டுள்ள 12 பஸ் டிப்போக்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கான புதிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து சபையின் செயற்திறனை அதிகரிப்பதற்கும் மேலும் பல வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் ஆலோசித்துள்ளது.

இதேவேளை வசதிகள் கூடிய இரண்டாயிரம் பஸ்களை இலங்கை போக்குவரத்து பஸ் சேவையில் இணைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். சாரதி மற்றும் நடத்துனர் வெற்றிடங்களுக்கு என புதியவர்களை நியமிக்கும் பணியை துரிதப்படுத்தப்படுத்துமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 12, 2020 12:25

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க