2020ம் ஆண்டை டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல் ஆண்டாக இலங்கை மத்திய வங்கி பிரகடனப்படுத்தியுள்ளது. அங்கீகாரம் பெற்ற வணிக வங்கிகள் உள்ளிட்ட ஏனைய நிதி நிறுவனங்களில் முன்னெடுக்கப்படும் டிஜிட்டல் முறையிலான கொடுக்கல் வாங்கல்களுக்கு மக்களை பழக்கப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
கையடக்கத்தொலைபேசி ஊடாக கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் முறையை ஊக்கப்படுத்தவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. தொழிநுட்பரீதியாக நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல் உதவியாக இருக்குமென மத்திய வங்கி தெரிவித்துள்ளது. திட்டத்திற்கென மத்திய வங்கியின் கொடுக்கல் வாங்கல் பிரிவு அறவீட்டுப் பிரிவு ஆகியன பல்வேறு வழிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.