fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அமெரிக்க ஜனாதிபதி இம்மாதம் இந்தியாவுக்கு விஜயம்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 12, 2020 12:00

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இம்மாதம் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். அவர் பிரதமர் நரேந்த்ர மோதியை சந்திக்கவுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. எதிர்வரும் 24ம் அல்லது 25ம் திகதிகளில் அமெரிக்க ஜனாதிபதி இந்திய சுற்றுப்பயணத்தில் இணைந்துகொள்ளவுள்ளார்.

இதன்போது இந்திய மற்றும் அமெரிக்க நாடுகளுக்கிடையிலான உறவை மேலும் வலுப்படுத்தல், இராணுவ ஆயுத கொள்வனவு, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் முக்கிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதேவேளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் இந்தியாவின் அகமதபாத்திலுள்ள காந்தி சபர்மதி ஆசிரமத்திற்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளார். அமெரிக்க முதற்பெண்மணி மெலனியா ட்ரம்பும் இந்திய சுற்றுப்பயணத்தில் பங்கேற்கவுள்ளதாக வெள்ளை மாளிகை தனது டுவிட்டர் பக்கத்தில் உத்தியோகப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 12, 2020 12:00

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க