fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வடமாகாண அபிவிருத்திக்காக ஆளுநருடன் இணைந்து பணியாற்ற அவுஸ்திரேலியா இணக்கம்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 12, 2020 11:51

வடமாகாண அபிவிருத்திக்காக ஆளுநருடன் இணைந்து பணியாற்ற அவுஸ்திரேலியா முன்வந்துள்ளது. இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் தலைமையிலான குழுவினர் வடமாகாண ஆளுனர் பி.எஸ்.எம்.சார்ள்சை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

ஏற்றுமதி துறை, சுற்றுலா மற்றும் சந்தைப்படுத்தலுக்கான கற்கை நெறிகள் தாதியர்களுக்கான சர்வதேச தர கற்கை நெறி தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது. எதிர்வரும் 5 வருடங்களுக்கான திட்டங்களை முன்னெடுக்க இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

முன்னெடுக்கப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்து சாத்தியப்படக்கூடிய திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியுமெனவும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். இதேவேளை அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகருடன் இணைந்து பணியாற்ற தயாராகவிருப்பதாக வடமாகாண ஆளுனர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 12, 2020 11:51

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo