நாட்டில் நிலவும் வரட்சியான வானிலை காரணமாக பல மாவட்டங்களின் மக்கள் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினைக்கு முகம்கொடுத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் 55 ஆயிரத்து 846 குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 36 ஆயிரத்து 556 பேர் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு முகம்கொடுத்துள்ளனர்.
கேகாலை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களிலேயே அதிகளவில் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினை நிலவுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் தண்ணீர் தாங்கிகள் மூலம் குடிநீரை விநியோகம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.