fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொரோனா வைரஸூக்கு சிகிச்சையளிப்பது தொடர்பில் 400 நிபுணர்களின் பங்களிப்புடன் விசேட சந்திப்பு

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 10, 2020 18:31

கொரோனா வைரஸூக்கு சிகிச்சையளிப்பது தொடர்பான விசேட சந்திப்பொன்று 400 நிபுணர்களின் பங்களிப்புடன் ஜெனிவாவில் இவ்வாரம் இடம்பெறவுள்ளது. கொரோனா வைரஸ் இதுவரை உலகின் 28 நாடுகளில் பரவியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. வைரஸ் தொற்றியதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 910ஆக உயர்ந்துள்ளது.

சீனாவில் 40 ஆயிரத்து 171 பேருக்கு இந்த வைரஸ் தொற்றியுள்ளது. மேலும் ஒரு இலட்சத்து 87 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பரிசோதனைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக சீன செய்திகள் தெரிவிக்கின்றன. புத்தாண்டு விடுமுறைக்காக வெளிநாடுகளில் இருந்து சீனாவுக்கு சென்றவர்கள், மீண்டும் அந்தந்த நாடுகளுக்கு திரும்புவதாக அறிவிக்கப்படுகின்றது. எனினும் பல நாடுகள் சீன பிரஜைகளுக்கு தத்தமது நாடுகளுக்கு வருகை தருவதை வரையறுத்துள்ளன.

உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சீனாவில் புதிய கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை தற்போது ஒரு நிலையான மட்டத்துக்கு வந்துள்ளது. இதனால் வைரஸ் பரவுவது ஒரளவு தடுக்கப்பட்டுள்ளது. சீன மத்திய வங்கி கொரோனாவை கட்டுப்படுத்த 43 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.

ஜப்பானின் பயணிகள் கப்பலில் இருந்த 60 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக உறுதியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பரவியநாடுளுள் இரண்டு நாடுகளில் இருவர் மாத்திரமே உயிரிழந்துள்ளனர். பிலிபைன்ஸ் மற்றும் ஹொங்கொங் ஆகிய நாடுகளில் இவ்வாறு மரணங்கள் சம்பவித்துள்ளது. பிரிட்டனில் கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 10, 2020 18:31

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க