92 வது ஒஸ்கார் விருது விழா
Related Articles
92 வது ஒஸ்கார்விருது விழா அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்சில் இடம்பெற்றுவருகிறது. விழாவில் கலைத்துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகளவான பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர். இம்முறை ஒஸ்கார் விருது விழாவில் சிறந்த நடிகருக்கான விருது ஜோக்கர் ஹொலிவுட் படத்தின் கதாநாயகன் Joaquin Phoenix க்கு வழங்கப்பட்டது. 45 வயதான அவர் முதன்முறையாக ஒஸ்கார் விருதை பெற்றுள்ளார். சிறந்த நடிகைக்கான விருதை ஜூடி திரைப்படத்தில் நடித்த j Renee Zellweger பெற்றுக்கொண்டார்.
சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த திரைக்கதைக்கான விருதுகள் கொரிய திரைப்படமான Parasite க்கு கிடைக்கப்பெற்றுள்ளது. வேற்று மொழி திரைப்படமொன்றிற்கு ஒஸ்கார் விருது கிடைக்கப்பெற்ற முதற் சந்தர்ப்பம் இதுவாகும்.
தென்கொரிய திரையுலகிற்கு கிடைக்கப்பெற்ற முதலாவது ஒஸ்கார் விருதாகவும் இது அமைந்துள்ளது.
சிறந்த துணை நடிகைக்கான விருதை டுயரசய னுநசn க்கு வழங்கப்பட்டது. பதிவு நெறியாக்கத்திற்கான ஒஸ்கார் விருது Ford v Ferrarதிரைப்படத்திற்கு வழங்கப்பட்டது. ஒளிப்பதிவிற்கான விருது Roger Deakinsக்கு வழங்கப்பட்டது. சிறந்த ஒலிக்கலவைக்கான விருது Mark Taylor & Stuart Wilsonக்கு வழங்கப்பட்டது.