fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கை – இந்திய பிரச்சினைக்கு மேலாண்மை ஆணையகம் அமைக்கப்பட வேண்டுமென்கிறார் அமைச்சர் டக்ளஸ்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 10, 2020 12:46

இலங்கை இந்திய மீனவ பிரச்சினைக்கு தீர்வுகாண கூட்டு கடல்சார் மீன்வள மேளாண்மை ஆணையகத்தை அமைக்கவேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பாக்கு நீரிணை மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் மேலாண்மை ஆணைக்குழு அமைக்கப்படுவது பிரச்சினைக்கு தீர்வாக அமையுமென அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயத்தின் இணைந்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மீனவர் பிரச்சினைகள் தொடர்பான 19 பக்கங்கள் அடங்கிய மகஜரொன்றை அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோதியிடம் கையளித்திருந்தார். தமிழக ஊடகமான தினத்தந்திக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின்போது கூட்டு கடல்சார் மீன்வள மேளாண்மை ஆணையகத்தை அமைப்பது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.

மீன்பிடி நடவடிக்கையினால் இலங்கையில் வடக்கு கடற்பகுதியில் காணப்படும் தனித்துவமான கடல் வளங்கள் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. அத்துடன் தமிழக மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையால் வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரமும் வீழ்ச்சியடைந்துள்ளது. யுத்த காலத்தில் வடக்கு பகுதியில் மீன்பிடிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. யுத்தம் நிறைவடைந்து ஒரு வருடத்திற்கு பின்னர் மீன்பிடிக்கான அனுமதி வழங்கப்பட்டது. எனினும் தமிழக மீனவர்களின் செயற்பாடுகளால் இலங்கை மீனவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 10, 2020 12:46

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க