fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கிண்ணத்தை பங்களாதேஷ் அணி சுவீகரித்துள்ளது..

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 10, 2020 12:25

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ணத்தை பங்களாதேஷ் அணி சுவீகரித்துள்ளது. தென்னாபிரிக்காவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியாவுக்கெதிராக வெற்றிபெற்று பங்களாதேஸ் இளையோர் அணி முதன்முதலாக கிண்ணத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஸ் அணி களத்தடுப்பை தெரிவுசெய்தது. அ

தற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய இளையோர் அணி 50 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து , 177 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. யஷாஸ்வி ஜெய்ஸ்வால் 88 ஓட்டங்களையும் திலக் வர்மா 38 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். 178 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஸ் இளையோர் அணி 7 விக்கட்டுகளை இழந்து, 163 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், போட்டிக்கு மழையால் பாதிப்பு ஏற்பட்டது. அதனையடுத்து டக்வத் லூயிஸ் முறைப்படி, 46 ஓவர்களில் 170 ஓட்டங்கள் எனும் வெற்றியிலக்கு நிர்ணயிக்கப்பட்டது. குறித்த இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஸ் அணி 46.1 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. அதற்கமைய 2020ம் ஆண்டுக்கான 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ணத்தை பங்களாதேஸ் அணி கைப்பற்றியுள்ளது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 10, 2020 12:25

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க