fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 800ஐ கடந்துள்ளது..

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 9, 2020 14:39

சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 800ஐ கடந்துள்ளது. மேலும் 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. அந்நாட்டின் ஹுபே மாநிலத்திலேயே வைரஸ் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. இதனால் குறித்த மாநிலம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சீன தகவல்கள் தெரிவிக்கின்றன. வைரஸ் கட்டுப்படுத்துவதற்கு அந்நாட்டு சுகாதார பிரிவு கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறது. எனினும் பரவும்வேகம் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை உலகில் 27க்கும் அதிகமான நாடுகளில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட சீனர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனால் சீனர்களை தமது நாட்டுக்குள் அனுமதிப்பதற்கும் உலக நாடுகள் பல தற்காலிக தடை விதித்துள்ளது. சீனாவுக்கான விமான சேவைகள் பலவும் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், சீனாவிலிருந்து வருகைத்தரும் விமானங்கள் குறித்தும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 9, 2020 14:39

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க