fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

திருகோணமலை சாம்பல்தீவு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 9, 2020 13:04

திருகோணமலை நிலாவெளி பிரதான வீதியின் சாம்பல்தீவு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். முச்சக்கர வண்டியொன்றும், துவிச்சக்கர வண்டியொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில், படுகாயமடைந்த இருவர் திருகோணமலை பொது வைத்தியசாலையி அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் துவிச்சக்கர வண்டியை ஓட்டிச்சென்றவர் சிகிச்சைப்பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். சல்லி, சாம்பல்தீவு பகுதியை சேர்ந்த 26 வயதுடைய ஒருவதே உயிரிழந்துள்ளதாக நிலாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் நிலாவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 9, 2020 13:04

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க