fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஆர்ப்பாட்டத்திற்கு மத்தியில் வருகை தந்த பிரமுகர்…

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 7, 2020 18:54

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று மாலை திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் மத்தியில் வருகை தந்தார்.

டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள் பலர் ஜனாதிபதி செயலகத்திற்கு அண்மையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒப்பந்த அடிப்படையில் கடந்த அரசாங்கம் இவர்களுக்கு வழங்கிய நியமனங்களை இடைநிறுத்தியுள்ளதாக கூறியே இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென குறித்த இடத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி கருத்துக்களை பரிமாறிக் கொண்டார். தாம் வழங்க போகும் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பில் இவர்களையும் இணைத்துக் கொள்வதாக ஜனாதிபதி இதன் போது தெரிவித்தார். அதனையடுத்து ஜனாதிபதிக்கு’ ஆர்ப்பாட்டக்காரர்களினால் பாரிய வரவேற்பு வழங்கப்பட்டது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 7, 2020 18:54

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க