fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வசந்த கரான்னாகொடவிற்கு மீண்டும் அழைப்பாணை

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 7, 2020 15:01

முன்னாள் கடற்படை தளபதி எட்மிரால் வசந்த கரான்னாகொடவிற்கு மீண்டும் அழைப்பாணையை பிறப்பிக்க கொழும்பு உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த அழைப்பாணையை பதில் பொலிஸ் மாஅதிபர் மற்றும் கடற்படை தளபதியின் ஊடாக அனுப்புமாறு மூவரடங்கிய உச்ச நீதிமன்றம் மேலும் உத்தரவிட்டது. 11 பேரை கடத்திச்சென்ற வழக்கு தொடர்பாகவே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் கடற்படை தளபதி எட்மிரால் வசந்த கரான்னாகொட இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார். இதன் அடிப்படையில் அவருக்கு மீண்டும் அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டது. 11 பேரை கடத்திச்சென்று கொலை செய்ய முயற்சி செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கு கொழும்பு மூவரடங்கிய உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கரன்னாகொட உள்ளிட்ட 16 பேருக்கு எதிராக சட்ட மாஅதிபர் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இதேநேரம் இந்த வழக்கு தொடர்பான சாட்சியாளர்களின் ஆவணங்களை பிரதிவாதிகளுக்கு வழங்கும் நடவடிக்கையும் இன்று இடம்பெற்றது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 7, 2020 15:01

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க