fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

விண்வெளியில் அதிக நாட்கள் தங்கி சாதனை படைத்த பெண்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 7, 2020 13:43

அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டினா கோச் விண்வெளியில் தொடர்ந்து அதிக நாட்களைக் கழித்த பெண் என்ற சாதனையை படைத்திருக்கிறார். அமெரிக்கா, ரஷ்யா உட்பட 13 நாடுகள் கூட்டாக விண்வெளியில் சர்வதேச ஆய்வு மையத்தை அமைத்துள்ளன. இந்த மையத்தில் ஆறு விஞ்ஞானிகள் தங்கி ஆராய்ச்சி மேற்கொள்கின்றனர். இவர்களில் மூன்று பேர் 5 அல்லது 6 மாதங்களுக்குப் பின் பூமிக்கு திரும்புவார்கள்.

அவர்களுக்குப் பதிலாக வேறு மூன்று பேர் அனுப்பிவைக்கப்படுவர். கடந்த ஜூலை மாதம் 20ஆம் தேதி அமெரிக்க விண்வெளி வீராங்கனை கிறிஸ்டீனா கோச் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்றார். சனிக்கிழமையுடன் அவர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 288 நாட்களைக் கழித்துள்ளார். இதன் மூலம் பெக்கி விட்சனின் முந்தைய சாதனையை முறியடித்து, விண்வெளியில் தொடர்ச்சியாக அதிக நாட்கள் வசித்த பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 7, 2020 13:43

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo