அவுஸ்திரேலியாவில் காட்டு தீயினால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு பகுதிகளுக்கு கடும் மழை பெய்துள்ளது. இதன் காரணமாக காட்டு தீயினால் பாதிக்கப்பட்ட 3ல் ஒரு பகுதியில் தீ அணைந்துள்ளது. இருப்பினும் கரையோர பகுதிகளான சிட்னி மற்றும் ஏனைய நகரங்களுக்கு வெள்ள அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் சில தினங்களுக்கு பலத்த மழை பெய்யக்கூடுமென அந்நாட்டு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காட்டு தீயினால் பாதிக்கப்பட்ட அவுஸ்திரேலியாவுக்கு மழை
படிக்க 0 நிமிடங்கள்