fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொரோனா தொடர்பில் முதலில் தகவல் வழங்கிய வைத்தியர் அவ்வைரஸினால் பலி

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 7, 2020 13:24

கொரோனா தொடர்பில் முதலில் தகவல் வழங்கிய வைத்தியர் அவ்வைரஸினால் பலி

கொரோனா வைரஸ் தொடர்பாக முதலில் தகவல்களை வெளியிட்ட வைத்தியர் குறித்த வைரஸினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இதுவரையில் இவ்வைரஸினால் 636 பேர் உயிரிழந்துள்ளனர். 31 ஆயிரத்து 161கும் மேற்பட்டோர் இந்நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

லீன் வென் லியேங்க் என்ற வைத்தியர் வூஹான் மத்திய வைத்தியசாலையில் பணிப்புரிந்து கொண்டிருக்கும் போதே வைரஸினால் பாதிக்கப்பட்டார். இந்த வைரஸின் அவதானம் குறித்து இவரிடம் இருந்து தகவல்கள் கிடைக்கப்பெற்றன. இதேநேரம் ஜப்பானில் டயமன்ட் பிரின்ஸ் பயணிகள் போக்குவரத்து கப்பலில் பயணித்த மேலும் 41 பேர் இவ்வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கப்பலில் வைரஸினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 61 ஆகும். இதுவரையில் 3700 பேரை கொண்ட கப்பல் இவ்வைரஸ் தொற்று காரணமாக யொகோஹமா துறைமுகத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸூக்கு சிகிச்சையளிப்பது தொடர்பாக கண்டறிவதற்கு சீனா மேலும் 66.74 பில்லியன் யென்களை ஒதுக்கியுள்ளது. அவுஸ்திரேலியா மத்திய வங்கி கருத்து தெரிவிக்கையில் சாஸ் நோயினால் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட இழப்பிலும் பார்க்க மிக கூடுதலான பாதிப்பு இவ்வைரஸினால் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேநேரம் சீனாவின் வூஹான் நகரில் இருந்து கனடா பிரஜைகள் அந்நாட்டுக்கு அழைத்துவரப்படவுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 7, 2020 13:24

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க