fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட சீனாவுக்கு இலங்கை தேயிலை

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 7, 2020 13:17

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட சீனாவுக்கு இலங்கை தேயிலை

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக ஒருதொகை தேயிலையை வழங்க ஜனாதிபதி செலயகம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இலங்கையில் உள்ள சீன தூதுவர் செங்சீவானிடம் ஜனாதிபதியின் கரங்களினால் குறித்த தேயிலை கையளிக்கப்பட்டது. மிகவும் கஸ்டமான காலப்பகுதியில் சீன அரசாங்கம் மற்றும் சீன மக்களுக்காக இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் செய்த பங்களிப்புக்காக சீன தூதுவர் நன்றி தெரிவித்தார். வூஹான் மாநிலத்தில் உள்ள இலங்கையர்களை அழைத்துவர வழங்கிய ஆதரவு குறித்தும் ஜனாதிபதி தூதுவருக்கு நன்றி தெரிவித்தார். இந்நோயை ஒழிப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை குறித்தும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கேட்டறிந்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த தூதுவர் வைரஸ் பரவும் அனைத்து இடங்களும் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சீனாவின் புதுவருடம் இலங்கையில் விடுமுறை காலம் இல்லாமையினால் இந்நாட்டில் உள்ள அதிகமான சீன நாட்டவர்கள் புதுவருடத்தை கொண்டாட சீனாவுக்கு சென்று மீண்டும் வருகை தந்துள்ளனர். இலங்கைக்கு மீண்டும் வருவதை தாமதப்படுத்துமாறு அவர்களிடம் கோரியதாக தூதுவர் இங்கு தெரிவித்தார். மீண்டும் வருகை தருபவர்கள் தனிமையில் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்பட்டுள்ள நிலைமையைடுத்து சீனா உள்ளிட்ட சூழவுள்ள பகுதிகளுக்கு பொருளாதார மற்றும் சமூக உதவிகளை வழங்குவதில் பல அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன. புதிய வைரஸ் தொடர்பில் பரிசோதனை குழுவொன்று ஏற்படுத்தப்பட்டுள்ள அதேவேளை துரித கதியில் தீர்வை பெற்று கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுவதாக சீன தூதுவர் ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 7, 2020 13:17

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க