ரிஷாட் பதுர்தீனின் சகோதரர் ரிப்கான் பதுர்தீன் மீண்டும் விளக்கமறியலில்..
Related Articles
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதுர்தீனின் சகோதரர் ரிப்கான் பதுர்தீன் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்வரும் 20 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரட்ன விளக்கமறியல் உத்தரவை பிறப்பித்துள்ளார். தலைமன்னார் பிரதேசத்திலுள்ள 240 இலட்சம் ரூபா பெறுமதியான இடத்தை போலி உறுதி தயாரித்து கைப்பற்றியதாக அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.