கொரோனா பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
Related Articles
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. விமான நிலையத்தில் பயணிகளை சோதனைக்குட்படுத்தும் செயற்பாடு ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளது. விசேட கவனம் செலுத்தவேண்டுமென அடையாளம் காணப்படும் பயணிகளின் பயண தகவல்களை பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கென பயணிகள் தொடர்பான தகவல்களை புதுப்பிக்கும் மூன்று முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. சுகாதார அதிகாரிகளினூடாக தகவல்களை பெற்றுக்கொள்ளவும் உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை சீனாவிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்டு, தியத்தலாவ இராணுவ முகாமின் வைத்திய பிரிவில் தங்கவைக்கப்பட்டுள்ள எந்தவொரு மாணவருக்கும் கொரோனா தொற்றுக்கான எவ்வித அறிகுறிகளும் இல்லையென சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.