கடல் மார்க்கமாக நாட்டுக்குள் போதைப்பொருள் எடுத்துவருவதை கட்டுப்படுத்துவதற்கென விரிவான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. இது தொடர்பான பல்வேறு சுற்றிவளைப்புக்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் காங்கேசன்துறை கடற்பிரதேசத்தில் முன்னெடுத்த சுற்றிவளைப்பின்போது 157 கிலோ கிராம் கேரள கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அவை கடலுக்குள் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த 35 நாட்களில் முன்னெத்த சுற்றிவளைப்புகளினூடாக 988 கிலோ கிராம் கேரள கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.