இலங்கை மீண்டும் பொன்னான யுகத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளது.
Related Articles
இலங்கை மீண்டும் பொன்னான யுகத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கத்துடன் புதிய தசாப்தத்தின் முதலாவது சுதந்திர தினத்தை இம்முறை கொண்டாடுவதாக, சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களிடம் குறிப்பாக, இளம் சந்ததியினரிடம் நாட்டைக் கட்டியெழுப்புவது தொடர்பானதொரு ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இலங்கை பொன்னான யுகத்தை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்துள்ளது என்பதை இந்த சுதந்திர தினத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவிக்க முடியும்.
அனைத்து இனப்பிரிவுகள், சமயங்களுக்கு உரித்தான மக்களும் ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்பும் மாபெரும் திட்டத்திற்குப் பங்களிப்புச் செய்வார்கள் என்பதே எனது நம்பிக்கையாகுமென்றும், பிரதமர் தனது செய்தியில் குறிப்பிட்டார்.