சுயாதீன தொலைக்காட்சி சேவை இன்று முதல் விசேட பல மாற்றங்களுடன் புதிய பயணத்தை ஆரம்பிக்கப்பவுள்ளது. இந்நாட்டின் முதலாவது தொலைக்காட்சி அலைவரிசையாக நான்கு தசாப்தங்களாக சுயாதீன தொலைக்காட்சி ரசிக மக்களிடம் நெருங்கியுள்ளது. சிறந்த மற்றும் உயர் ரசனைகொண்ட மக்களின் இதயத்தை புரிந்து நிகழ்ச்சிகளை வழங்கியதன் ஊடாக சுயாதீன தொலைக்காட்சி மக்கள் மனதில் நிலைத்துள்ளது. இன்றைய புதிய பயணத்துடன் மேலும் பல விசேட மாற்றங்களுடன் சுயாதீன தொலைக்காட்சி மக்களை பரவசப்படுத்தவுள்ளது.
தொலைக்காட்சி நாடகங்கள், செய்தி மற்றும் சமகால நிகழ்ச்சிகள் உள்ளிட்ட சகல நிகழ்ச்சிகளும் புதிய கோணத்தில் இன்று முதல் ஒளிபரப்பாகவுள்ளன. நாட்டின் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கென மக்களின் அபிலாஷைகளை முன்வைத்து, சிறந்த ஒழுக்கமிக்க ஊடக பண்பை ஏற்படுத்துவதே சுயாதீன தொலைக்காட்சியின் நோக்கமாகும்.