ரஷ்ய சம்மேளனத்தின் படைகளிக் தளபதி ஜெனரல் ஒலெக் சல்யுகோட் இன்றைய தினம் நாட்டிற்கு வருகை தந்துள்ளார். 5 நாட்கள் இலங்கையில் தங்கவுள்ள அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவையும் சந்திக்கவுள்ளார்.
அத்துடன் பதில் பாதுகாப்பு பிரதானி, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்டோரையும் ரஷ்ய பிரதிநிதி சந்திக்கவுள்ளதாக இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை நாளை கொண்டாடப்படவுள்ள தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்களில் விசேட விருந்தினராகவும் அவர் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.