நாட்டில் காட்டுத்தீ பரவும் சம்பவம் அதிகரித்துள்ளதாக வனப்பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. பதுறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் அண்மையில் அதிக தீப்பரவல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டபிள்யு. ஏ.சி. வேரகொட தெரிவித்துள்ளார்.
வரட்சி மற்றும் மனித செயற்பாடுகள் காரணமாக தீச் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் வனப்பகுதிகளில் தீ பரவல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இரவு வேளையில் காடுகளுக்கு தீ வைக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.
இதுபோன்ற சட்டவிரோத செயலில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் இருப்பதாகவும் வனப் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம் டபிள்யு. ஏ.சி. வேரகொட சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் குறித்த விடயம் தொடர்பில் உரிய மேலதிகாரிகளுக்கு அறிவிக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.