ஐ.டி.எச். வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதற்கு திட்டம்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 3, 2020 11:27

ஐ.டி.எச். வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதற்கு திட்டம்

அங்கொட ஐ.டி.எச். வைத்தியசாலை தெற்காசியாவின் சிறந்த தொற்றுநோய்யியல் நிறுவனமாக அபிவிருத்தி செய்யப்படுமென வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ச்சந்திரா சூரியாராய்ச்சி தெரிவித்துள்ளார். அங்கு நவீன ஆய்வுகூட வசதிகளுடன் கூடிய வாட்தொகுதியை ஒன்றை புதிதாக நிர்மாணிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவர் இலங்கையில் இனங்காணப்பட்டார்.  அவருக்கு குறித்த வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்பட்டது. சீனப் பிரஜையான அவர் தற்போது முழுமையாக குணமடைந்துள்ளதாக வைத்தியர் ச்சந்திரா சூரியாராய்ச்சி குறிப்பிட்டார். எனினும் அவரை இறுதி பரிசோதனைக்கு இன்றைய தினம் உட்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. குறித்த பெண் தொடர்பில் முழுமையான மருத்துவ பரிசோதனைகள் நிறைவடைந்ததன் பின்னர் அவரை வைத்தியசாலையிலிருந்து சீனாவுக்கு அனுப்புவதற்கு அல்லது பாதுகாப்பான ஒரிடத்தில் தங்கவைத்து நாட்டுக்கு அனுப்புவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இலங்கையிலுள்ள சீன தூதரகம் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

கொரோன வைரஸ் தொடர்பான சந்தேகத்தின் அடிப்படையில் சுமார் 70 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சைபெறும் ஏனையவர்கள் எவ்வித பயமும் இன்றி சிகிச்சைகளை பெறமுடியுமென வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ச்சந்திரா சூரியாராய்ச்சி தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 3, 2020 11:27

Default