fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

போதைப்பொருளுடன் சிவனொளிப்பாதமலை யாத்திரைக்கு சென்ற 13 பேர் கைது

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 2, 2020 15:27

போதைப்பொருளுடன் சிவனொளிப்பாதமலை யாத்திரைக்கு சென்ற 13 பேர் கைது

போதைப்பொருளுடன் சிவனொளிப்பாதமலை யாத்திரைக்கு சென்ற 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஹெட்டன் குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் கினிகத்தேனை தியகல பகுதியில் வாகனமொன்றை சோதனைக்குட்படுத்திய போது குறித்த 13 பேரும் அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் 20 முதல் 30 வயதிற்குட்பட்டவர்கள் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை சிவனொளிப்பாதமலை யாத்திரைக்காலம் ஆரம்பமாகி, இரண்டே மாதங்கள் கடந்துள்ள நிலையில் இதுவரை போதைப்பொருளுடன் அங்கு வருகை தந்த 350 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஹெட்டன் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 2, 2020 15:27

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க