fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

3 கோடிக்கு அதிக பெறுமதிகொண்ட கேரள கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர் கைது

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 2, 2020 14:44

3 கோடிக்கு அதிக பெறுமதிகொண்ட கேரள கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர் கைது

3 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதிகொண்ட கேரள கஞ்சா போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்ய்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாதகல் பகுதியிலுள்ள வீடொன்றை சோதனையிட்ட போது 180 கிலோகிராம் எடையுடைய குறித்த கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது.

யாழ்ப்பாணம் – மயிலடி பிரதேசத்தை அண்மித்த கடற்பகுதியில் ஒருதொகை கேரள கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் கடலில் மிதந்த நிலையில் காணப்பட்ட பொதியொன்று மீட்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். குறித்த பொதியை பரிசோதனைக்கு உட்படுத்திய நிலையில், அதில் கேரள கஞ்சா போதைப்பொருள் இருந்தமை தெரியவந்துள்ளது.

அதில் இருந்த 97 கிலோ கிரேம் எடைகொண்ட கேரள கஞ்சா போதைப்பொருள் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது. அவை அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கடந்த ஒரு மாத்தில் கடற்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பினூடாக 500 கிலோ கிராமுக்கும் அதிக எடைகொண்ட கேரள கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியிலுள்ள கரையோர பிரதேசங்கள் மற்றும் கடற்பகுதிகளில் சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டன. கடந்த வருடமும் இதுபோன்ற தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றது. அதனூடாக 3.4 தொன்னுக்கும் அதிக கேரள கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 2, 2020 14:44

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க