fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொழும்பிலுள்ள 15 பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 2, 2020 14:33

கொழும்பிலுள்ள 15 பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

கொழும்பு மாவட்டத்தின் 15 பிரதான பாடசாலைகளுக்கு நாளைய தினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 72 வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் ஒத்திகை நிகழ்வுகளை கருத்திற்கொண்டு விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு டீ.எஸ். சேனாநாயக்க கல்லூரி, ரோயல் கல்லூரி, தர்ஸ்டன் கல்லூரி, யசோதரா கல்லூரி, மியுசியஸ் கல்லூரி, செயின்ட் பிரிட்ஜெட் கல்லூரி, மகளிர் கல்லூரி, கொழும்பு சர்வதேச பாடசாலை மற்றும் விச்சர்லி சர்வதே பாடசாலை என்பவற்றுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மகாநாம கல்லூரி, புனித மைக்கல் ஆண்கள் பாடசாலை, பொல்வத்த புனித மரியாள் பெண்கள் பாடசாலை என்பவற்றுக்கும் எதிர்வரும் திங்கட் கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. சுதந்திரதின ஒத்திகை நடவடிக்கைகளுக்கான பயிற்சிகளில் பங்கேற்கும் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 2, 2020 14:33

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo