மத்திய கிழக்குக்கு மேலதிக படையினரை அனுப்ப அமெரிக்க ஜனாதிபதி நடவடிக்கை

மத்திய கிழக்குக்கு மேலதிக படையினரை அனுப்ப அமெரிக்க ஜனாதிபதி நடவடிக்கை 0

🕔12:24, 1.ஜன 2020

மத்திய கிழக்குக்கு மேலதிக படையினரை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பாக்தாத் தூதரகத்தை அண்மித்த பகுதிகளில் 750 படையினர் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். எனினும் பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய தேவை காணப்படுகிறது. இதனால் மேலதிய படையினரை பணியில் அமர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

Read Full Article
யாழில் இடம்பெற்ற வாகன விபத்தில் 8 பேர் காயம்

யாழில் இடம்பெற்ற வாகன விபத்தில் 8 பேர் காயம் 0

🕔12:20, 1.ஜன 2020

யாழ்ப்பாணம் – பொன்னாலை முச்சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளனர். ட்ரக்டர் வண்டியொன்று குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவர்கள் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் இருவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். ட்ரக்டர் அதிகவேகத்தில் பயணித்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிவந்துள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை

Read Full Article
சட்டவிரோத போதைப் பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்துவதற்கு தொடர்ந்தும் சுற்றிவளைப்புக்கள்

சட்டவிரோத போதைப் பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்துவதற்கு தொடர்ந்தும் சுற்றிவளைப்புக்கள் 0

🕔12:17, 1.ஜன 2020

சட்டவிரோத போதைப் பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்துவதற்கு தொடர்ந்தும் சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்படுமென கடற்படை தெரிவித்துள்ளது. போதைப் பொருட்களை கடல்மார்க்கமாக நாட்டுக்குள் எடுத்துவருவதை தடுப்பதற்கான விசேட சுற்றிவளைப்புக்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. அவ்வாறு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது 2 கிலோ கிராம் கேரள கஞ்சா போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் யாழ்ப்பாணம் அல்லப்பிட்டி பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Read Full Article
அரசாங்கம் அறிவித்த வரி நிவாரணம் இன்று முதல் அமுல்

அரசாங்கம் அறிவித்த வரி நிவாரணம் இன்று முதல் அமுல் 0

🕔12:14, 1.ஜன 2020

அரசாங்கம் அறிவித்த வரி நிவாரணம் இன்று முதல் அமுல்படுத்தப்படுவதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். வெட் வரி நூற்றுக்கு 8 வீதம் வரை குறைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். சேமிப்பு கணக்குகளின் வட்டிக்கமைய இதுவரை அறவிடப்பட்ட நூற்றுக்கு 5 வீத இருப்பு வரி ரத்துசெய்யப்பட்டுள்ளது. பொருளாதார சேவைக்கட்டணம், வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் அடிப்படை வட்டி ,

Read Full Article
முச்சக்கர வண்டி பயணக்கட்டணம் இன்றுமுதல் குறைப்பு

முச்சக்கர வண்டி பயணக்கட்டணம் இன்றுமுதல் குறைப்பு 0

🕔12:13, 1.ஜன 2020

முச்சக்கர வண்டிகளுக்கான பயணக்கட்டணம் இன்று முதல் குறைக்கப்படுவதாக அகில இலங்கை சுயதொழிலாளர்களின் முச்சக்கர வண்டி சங்கம் தெரிவித்துள்ளது. டயர் உள்ளிட்ட பொருட்களுக்கு அறவிடப்படும் வரி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. அதன் பலனை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் நோக்கில் கட்டண குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்த்தன தெரிவித்தார். முதலாவது கிலோமீற்றர் 10 ரூபாவாலும் இரண்டாவது கிலோமீற்றர் 5

Read Full Article
பயணிகள் பஸ்வண்டிகளில் அதிகசப்தத்துடன் பாடல்களை ஒலிபரப்ப இன்று முதல் தடை

பயணிகள் பஸ்வண்டிகளில் அதிகசப்தத்துடன் பாடல்களை ஒலிபரப்ப இன்று முதல் தடை 0

🕔11:42, 1.ஜன 2020

தனியார் பஸ்களில் அதிக சத்தத்துடன் பாடல்கள் மற்றும் வீடியோ காட்சிகளை ஒலி, ஒளிபரப்பு செய்ய இன்றுமுதல் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் அமைச்சர் மஹிந்த அமரவீர தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இன்றிலிருந்து பஸ்களில் அதிக சத்தத்துடன் பாடல்கள் மற்றும் விடியோ காட்சிகள் ஒலிபரப்பபடின் அதுகுறித்து 1955 எனும் துரித தொலைபேசி இலக்கத்தின் ஊடாக முறைப்பாடுகளை தெரிவிக்குமாறு

Read Full Article
10 இலட்சம் மரக்கன்றுகளை நடும் தேசிய வேலைத்திட்டம் இன்று முற்பகல் ஆரம்பம்

10 இலட்சம் மரக்கன்றுகளை நடும் தேசிய வேலைத்திட்டம் இன்று முற்பகல் ஆரம்பம் 0

🕔11:38, 1.ஜன 2020

10 இலட்சம் மரக்கன்றுகளை நடும் தேசிய வேலைத்திட்டம் இன்று முற்பகல் ஆரம்பமாகவுள்ளது. ‘மலரும் நாட்டில் வளரும் மரம்’ என இவ்வேலைத்திட்டத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. இன்று காலை சுபவேளையில் அனுராதபுரம் மஹமெயுனா உயன் வளாகத்தில் இதன் ஆரம்பநிகழ்வு இடம்பெறவுள்ளது. இதற்கிணைவாக நாடுமுழுவதும் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

Read Full Article
கஜ முத்துக்களை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபர்கள் 7 பேர் கைது

கஜ முத்துக்களை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபர்கள் 7 பேர் கைது 0

🕔11:37, 1.ஜன 2020

பல இலட்சம் ரூபா பெறுமதியான கஜ முத்துக்களை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபர்கள் 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாடி வீட்டு வீதியில் விசேட அதிரடிப்படையினர் நேற்றிரவு முன்னெடுத்தத சுற்றிவளைப்பின்போது இவர்கள் கைதாகினர். கைதுசெய்யப்பட்ட நபர்களிடமிருந்து 5 கஜமுத்துக்கள் , 7 கைத்தொலைபேசிகள் மீட்கப்பட்டதோடு அவர்கள் பயணித்த டொல்பின் ரக வேனொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக

Read Full Article
சுயாதீன தொலைக்காட்சி மற்றும் லக்ஹண்ட வானொலி மீண்டும் புதிய பயணத்தில்..

சுயாதீன தொலைக்காட்சி மற்றும் லக்ஹண்ட வானொலி மீண்டும் புதிய பயணத்தில்.. 0

🕔10:30, 1.ஜன 2020

சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் லக்ஹண்ட வானொலி மற்றும் சுயாதீன தொலைக்காட்சி என்பன இன்று முதல் புதியதொரு பயணத்தை ஆரம்பித்துள்ளன. லக்ஹண்ட வானொலி மற்றும் சுயாதீன தொலைக்காட்சி ஆகியவற்றுக்கு முன்னர் இருந்த பெறுமதி மற்றும் பொறுப்புக்களை பாதுகாத்து புதிய பயணம் இன்று முதல் ஆரம்பமானது. லக்ஹண்ட வானொலியின் இலட்சினை மற்றும் சுயாதீன தொலைக்காட்சி இலட்சினை ஆகியன

Read Full Article
2020 முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்

2020 முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம் 0

🕔10:18, 1.ஜன 2020

கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சையின் முதற்கட்ட விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் எதிர்வரும் 4 ம் திகதி நிறைவடையவுள்ளன. 84 பாடசாலைகளில் அமைக்கப்பட்டுள்ள 110 மத்திய நிலையங்களில் மதிப்பீட்டு பணிகள் இடம்பெறுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதில் 47 பாடசாலைகள் மாத்திரம் எதிர்வரும் 6 ம் திகதி வரை மூடப்படவுள்ளன. ஏனைய பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் நாளையதினம்

Read Full Article

Default