துப்பாக்கி பிரயோகத்தில் நபர் ஒருவர் உயிரிழப்பு

துப்பாக்கி பிரயோகத்தில் நபர் ஒருவர் உயிரிழப்பு 0

🕔14:11, 2.ஜன 2020

ராகம, கெந்தலியந்தபாலுவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் மத்தேகொட பகுதியை சேர்ந்த 30 வயதுடையவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர். வாகனம் ஒன்று தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் காரணமாக துப்பாக்கிபிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் ராகம பொலிஸார்

Read Full Article
இன்றைய வானிலை

இன்றைய வானிலை 0

🕔14:11, 2.ஜன 2020

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சில கடற்பிராந்தியங்களிலும் மழையுடன் கூடிய வானிலை நிலவுமென வானிலை அதிகாரி கே.சூரியகுமாரன் தெரிவித்தார்.

Read Full Article
பொலிஸ் ஊடகப் பிரிவின் புதிய பணிப்பாளராக பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன கடமைகளை பொறுப்பேற்றார்

பொலிஸ் ஊடகப் பிரிவின் புதிய பணிப்பாளராக பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன கடமைகளை பொறுப்பேற்றார் 0

🕔14:09, 2.ஜன 2020

பொலிஸ் ஊடகப் பிரிவின் புதிய பணிப்பாளராக பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தனது கடமைகளை பொறுப்பேற்றார் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியின் கீழ், பதில் பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கமைய குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஜாலிய சேனாரத்ன இதற்கு முன்னர் பொலிஸ் சட்டப்பிரிவில் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.

Read Full Article
இராணுவத் தளபதி பதில் பாதுகாப்புபடை பிரதானியாக பொறுப்பேற்பு

இராணுவத் தளபதி பதில் பாதுகாப்புபடை பிரதானியாக பொறுப்பேற்பு 0

🕔14:09, 2.ஜன 2020

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா பதில் பாதுகாப்பு படைப் பிரதானியாக தனது கடமைகளை பொறுப்பேற்றார். எட்மிரல் ரவீந்திர விஜயகுணரத்ன ஓய்வுபெற்றதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டார்.

Read Full Article
இந்தோனேஷியாவில் வெள்ள அனர்த்தத்தில் சிக்குண்டு 16 பேர் பலி

இந்தோனேஷியாவில் வெள்ள அனர்த்தத்தில் சிக்குண்டு 16 பேர் பலி 0

🕔14:06, 2.ஜன 2020

இந்தோனேஷியாவில் வெள்ள அனர்த்தத்தில் சிக்குண்டு 16 பேர் பலியாகியுள்ளனர். மேலும் அதிகளவானோர் பாதுகாப்பு மத்திய நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். ஜஹார்த்தா உள்ளிட்ட பிரதேசங்களில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. உள்ளுர் விமான போக்குவரத்துக்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதனால் சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிகமான பயணிகள் விமான நிலையத்தில் தங்கியுள்ளதாக இந்தோனேஷிய செய்திகள் தெரிவிக்கின்றன.

Read Full Article
2020 போட்டிக்கென இந்தியாவிற்கு இலங்கை விஜயம்

2020 போட்டிக்கென இந்தியாவிற்கு இலங்கை விஜயம் 0

🕔14:03, 2.ஜன 2020

2020 கிரிக்கட் போட்டி தொடரில் கலந்து கொள்வதற்காக இலங்கை அணி இந்தியா நோக்கி பயணித்தது. இந்தியாவுடன் 3 , 2020 போட்டிகளில் இலங்கை கலந்து கொள்ளவுள்ளதுடன் முதலாவது போட்டி எதிர்வரும் 5 ஆம் திகதி குவாத்தியில் நடைபெறவுள்ளது. இந்திய அணியின் தலைவராக விராட் கொஹ்லி நியமிக்கப்பட்டுள்ளதுடன் லோகேஷ் ராகுல் , ஷிகர் தவான், மனிஷ்பாண்டே மற்றும்

Read Full Article
விபத்துக்களில் 3 பேர் உயிரிழப்பு : 8 பேர் காயம்

விபத்துக்களில் 3 பேர் உயிரிழப்பு : 8 பேர் காயம் 0

🕔14:01, 2.ஜன 2020

இரு விபத்துக்களில் 3 பேர் உயிரிழந்தும் 8 பேர் காயமடைந்தும் உள்ளனர். கார் ஒன்று முச்சக்கர வண்டியொன்றுடன் மோதியதில் இருவர் உயிரிழந்தனர். அம்பலந்தோட்டை கரம்பகலமுல்ல பகுதியில் இவ்விபத்து ஏற்பட்டது. கார்ஓட்டுனரின் கவனயீனமே விபத்துக்கு காரணம் எனபொலிஸார் தெரிவிக்கின்றனர். இதேவேளை பாதுக்க மலகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். முச்சக்கர வண்டியொன்றும் லொறியொன்றும் நேருக்கு நேர்

Read Full Article
ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் நெடுஞ்சாலையினால் ஹம்பாந்தோட்டைக்கு செல்ல சந்தர்ப்பம்

ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் நெடுஞ்சாலையினால் ஹம்பாந்தோட்டைக்கு செல்ல சந்தர்ப்பம் 0

🕔13:59, 2.ஜன 2020

தெற்கு நெடுஞ்சாலையின் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையிலான பகுதி முதலாவது காலாண்டிற்குள் பூர்த்தி செய்யப்பட்டு எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் மக்களின் பாவனைக்கென திறந்து வைக்கப்படுமென அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். துறைமுகங்கள் அமைச்சில் புதிய ஆண்டிற்கான பணிகளை ஆரம்பித்து வைத்தன் பின்னரே அமைச்சர் இவ்வாறு தெரிவிதித்தார். அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உரையாற்றுகையில் ; “தெற்கு நெடுஞ்சாலையின்

Read Full Article
வனஜீவராசிகள் சுற்றுலாவுக்கு சிறந்த நாடாக இலங்கை

வனஜீவராசிகள் சுற்றுலாவுக்கு சிறந்த நாடாக இலங்கை 0

🕔13:55, 2.ஜன 2020

சுற்றுலா நடவடிக்கைகளுக்கென ஆசியாவின் சிறந்த நாடாக இலங்கை மாறியுள்ளது.ஆசியாவின் நாடுகள் தொடர்பாக விசேட ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்வில் இலங்கைக்கு முதலிடம் கிடைத்துள்ளது. ஆசியாவின் முன்னணி 10 வெளியீடுகளினால் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்மைய இலங்கை வனஜீவராசிகள் தொடர்பான சுற்றுலா விடயங்களுக்கு ஆசியாவின் சிறந்த நாடாக மாறியமைக்கான கௌரவபூர்வமான சான்றிதழ் கோலாலம்பூரில் இந்நாட்டு பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

Read Full Article
ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் 0

🕔11:44, 2.ஜன 2020

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று உணரப்பட்டுள்ளது. அது ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கம் இதுவாகும். நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை. நிலஅதிர்வையடுத்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லையென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Read Full Article

Default