fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மாவனல்லை சம்பவம் தொடர்பிலான விசாரணை குறித்து ஆணைக்குழுவில் தகவல்கள் அமபலம்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 31, 2020 19:38

மாவனல்லை சம்பவம் தொடர்பிலான விசாரணை குறித்து ஆணைக்குழுவில் தகவல்கள் அமபலம்

மாவனெல்ல புத்தர் சிலை உடைத்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடவடிக்கைகளுக்காக தொடர்புபடுத்துவதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சிலவேளை அரசியல் தலையீடுகள் இருந்திருக்க கூடுமென்று சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கேகாலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கமல்பெரேரா தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்றைய தினம் சாட்சியங்களை வழங்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இன்றைய தினம் சாட்சிகளை வழங்குவதற்கு உதவி பொலிஸ் அத்தியட்சகர் கமல் பெரேரா இன்று பிற்பகல் ஒரு மணியளவில் ஆணைக்குழுவுக்கு வருகை தந்திருந்தார். ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை ஆரம்பித்து அரசாங்கத்தின் சட்ட ஆலோசகர் கருத்து தெரிவிக்கையில் குறித்த பிரிவுக்கு பொறுப்பான பிரதிபொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய இது தொடர்பில் தான் அறிந்து வைத்ததாகவும் பின்னர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்ததாகவும் அவர் இங்கு மேலும் தெரிவித்தார். குறித்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட முதலாவது சந்தேக நபரிடமிருந்து வினாக்களை தொடுத்தபோது ஷாதிக் மற்றும் சித்தீக் ஆகிய சகோதரர்கள் இருவரும் கைதுசெய்வதற்கு முடிந்ததாகவும் அவர் ஆணைக்குழுவில் சாட்சியமளித்தார். குறித்த சந்தேக நபர்கள் இருவரினதும் தந்தையான இப்ராஹீம் என்பவர் தொடலர்பில் தகவல்களை பெற்றுக்கொண்டதாகவும் அவர் ஆணைக்குழுவின் முன்னிலையில் தெரிவித்தார்.

இப்ராஹீம் என்பவர் கடுமையான மத வெறிபிடித்தவர் என்றும் அவர் குறித்த பிரதேசத்தில் இளைஞர்களை ஒன்றுகூட்டி அடிப்படைவாத சமய கல்வியை பயிற்றுவிப்பவர் என்று தகவல் பெறப்பட்டதன் பின்னரே அவரையும் கைதுசெய்ததாகவும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் இங்கு தெரிவித்தார். இங்கு ஆணைக்குழுவில் சட்டஆலோசகர் கருத்த தெரிவிக்கையில் அசாத்சாலி, இரண்டு சந்தேக நபர்களையும் பொலிசாருக்கு ஒப்படைப்பதாக தனது தெரிவித்தாரா என்றும் வினவினார். அதற்கு பதிலளித்த உதவி பொலிஸ் அத்தியட்சகர், அவ்வாறு மேற்கொள்ளப்படுமென பொலிஸ் மா அதிபர் , பிரதி பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்த அதேவேளை, பிரதி பொலிஸ் மா அதிபர் ஊடாக தான் அது தொடர்பில் அறிந்துகொண்டதாகவும் தெரிவித்தார். அவ்வாறான இரண்டு சந்தேக நபர்கள் அசாத் சாலியினால் பொலிசாருக்கு ஒப்படைத்தாரா என்றும் ஆணைக்குழு வினவியது. அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லை என உதவி பொலிஸ் அத்தியட்சகர் கமல்பெரேரா பதில் அளித்தார். உதவி பொலிஸ் அத்தியட்சகர் காமினி தென்னகோன் அசாத் சாலியை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டுஇது தொடர்பில் தன் முன்னிலையில் கேட்டதாகவும் அதற்கு அசாத் சாலியிடமிருந்து முறையான பதில் கிடைக்கப்பெறவில்லையென்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார். அதனடிப்படையில் குறித்த தொலைபேசி அழைப்பை உடனடியாக துண்டிக்குமாறு அவ்விடத்திலிருந்த பிரதி பொலிஸ் மா அதிபர் பாலித்த சிறிவர்ததன காமினி தென்னகோனுக்கு அறிவித்தார். பின்னர் ஆணைக்குழு இந்த விசாரணைக்காக குற்றப்புலனாய்வு திணைக்களம் எப்பொழுது தொடர்பு கொண்டது என வினவினார்.

அதற்கு பதிலளித்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர 2018.12.26 அன்று கேகாலை பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்து தன்னை சந்தித்த இந்த விசாரணை நடவடிக்கைகளை குற்றப்புலனாய்வு திணைக்களம் பொறுப்பேற்பதாக உத்தியோகபற்ற முறையில் தனக்கு அறிவித்தார். ஒரு பிரதேச பொலிஸ் விசாரணைகளை எந்த அடிப்படையில் குற்றப்புலனாய்வு திணைக்களம் பொறுப்பேற்கும் என்று ஆணைக்குழு உதவி பொலிஸ் அத்தியட்சகரிடம் வினவியது. அதற்கு பதிலளித்த உதவி பொலிஸ் அத்தியட்சர், ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் அல்லது பொலிஸ் மா அதிபரின் உத்தரவில் அவ்வாறானதொரு விசாரணை நடவடிக்கைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பேற்கு என்றும் தெரிவிக்கப்பட்டது. இருந்தபோதிலும் இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் வருகைதந்து குறித்த விசாரணைகளை குற்றப்புலனாய்வு திணைக்களம் பொறுப்பேற்கும் என தெரிவித்ததாகவும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் இங்கு தெரிவித்தார்.

இதற்கு முன்னர் இவ்வாறானதொரு சம்பவம் ஒன்றிற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஒரு தடவை மாத்திரம் வருகை தந்ததாகவும் அது, நாலந்த எல்லாளவின் கொலை சம்பவத்திற்கு மாத்திமே என்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார். இருந்தபோதிலும் அவ்வாறு வருகை தந்த பணிப்பாளர் கமல் சிறந்த முறையில் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறாரா என்ற வினவியதன் பின்னர் பகல் போசனத்திற்கு பின்னர் அவர் புறப்பட்டு சென்றார் என்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தார். இந்த விசாரணை நடவடிக்கைகளுக்காக அரசியல் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதா என்று ஆணைக்குழு இங்கு உதவி பொலிஸ் அத்தியட்சகரிடம் வினவியது.

அதற்கு பதில் வழங்கிய உதவி பொலிஸ் அத்தியட்சகர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் இந்த இடத்திற்கு வருகை தந்ததன் பின்னர் அவர் விசாரணை நடவடிக்கைகளை கைவிட்டு குறித்த இடத்திலிருந்து சென்றமையானது குறித்த விசாரணை தொடர்பில் அரசியல் அழுத்தங்கள் காரணமாக அவர் அவ்வாறு செயற்பட்டாரா என்றும் சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறிப்பினும் இறுதி சாட்சியங்களை பெறுவதற்காக குறித்த இடத்திலிருந்து ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் ஆணைக்குழு இங்கு தெரிவித்தது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 31, 2020 19:38

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க