குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சானி அபேசேகர தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீதான மனுவை மே மாதம் 11ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உச்ச நீதிமன்றம் திகதி நிர்ணயித்தது. காலி பிரதேசத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபரின் தனிப்பட்ட உதவியாளராக வழங்கப்பட்ட இடம்மாற்றத்தை சவாலுக்கு உட்படுத்தியே இம்மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் கிடைக்காமையினால் மீண்டும் அறிவித்தலை விடுக்குமாறு பிரதம நீதியரசர் உள்ளிட்ட மூவர் அடங்கிய நீதிபதிகள் குழு உத்தரவிட்டது.
சானி அபேசேகரவின் அடிப்படை உரிமை மீதான மனு மே மாதம் 11ம் திகதி விசாரணைக்கு
படிக்க 0 நிமிடங்கள்