fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

குரங்குகளை பயமுறுத்துவதற்காக கரடி உடை அணிந்த மக்கள்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 31, 2020 15:27

குரங்குகளை பயமுறுத்துவதற்காக கரடி உடை அணிந்த மக்கள்

குரங்குகளை பயமுறுத்துவதற்காக கிராம மக்கள் கரடி உடை அணிந்த சம்பவம் இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் பதிவாகியுள்ளது. அங்குள்ள கிராமமொன்றில் குரங்குகளின் செயற்பாடுகள் காரணமாக பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. வீடுகளிலுள்ள உணவுப்பொருட்களை குரங்குகள் திருடுவதுடன், ஏனைய பொருட்களை சேதப்படுத்தியுள்ளன. விவசாய பயிர்ச்செய்கைகளையும் குரங்குகள் சேதப்படுத்தியுள்ளன.

அவற்றை விரட்ட, பல முயற்சிகள் மேற்கொண்டும் வெற்றியளிக்கவில்லை. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குரங்குகள் கிராமத்தை ஆக்கிரமித்துள்ளன. இதனால் கிராம மக்கள் கரடி போன்று உடை அணிந்து, ரோந்து பணியில் ஈடுபட்டனர். குரங்குகள் கரடிகளுக்கு பயந்துள்ளன. குறித்த யோசனை பயனுள்ளதாகவே அமைந்துள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 31, 2020 15:27

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க