பிரதமர் எதிர்வரும் 7ம் திகதி இந்தியாவுக்கு விஜயம்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 31, 2020 15:10

பிரதமர் எதிர்வரும் 7ம் திகதி இந்தியாவுக்கு விஜயம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 7ம் திகதி இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். 4 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோதியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கை – இந்திய மீனவ பிரச்சினைகள் மற்றும் இருதரப்பு தொடர்புகளை வலுப்படுத்திக்கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்படவுள்ளது. வலய ஒத்துழைப்பு தொடர்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக பிரதமரின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 31, 2020 15:10

Default