fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வடமாகாணத்தில் கணிதம் மற்றும் விஞ்ஞான துறைகளில் வெற்றிடங்கள் காணப்படுவதாக மாகாண ஆளுநர் தெரிவிப்பு

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 31, 2020 14:35

வடமாகாணத்தில் கணிதம் மற்றும் விஞ்ஞான துறைகளில் வெற்றிடங்கள் காணப்படுவதாக மாகாண ஆளுநர் தெரிவிப்பு

வடமாகாணத்தில் கணிதம் மற்றும் விஞ்ஞான துறைகளில் வெற்றிடங்கள் காணப்படுவதாக மாகாண ஆளுநர் பீ. எஸ். எம் ச்சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். அரச திணைக்களங்களில் வைத்தியர்கள், தாதியர்கள், பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள் உள்ளன. எனினும் கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்களை கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி காணப்படுவதாக வடமாகாண ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் தேவையான துறையில் மாணவர்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டுமென ஆளுநர் வலியுறுத்தியுள்ளார். வடமாகாணத்தில் 221 வைத்தியர்களுக்கும், 200க்கும் மேற்பட்ட தாதியர்களுக்கும் வெற்றிடங்கள் உள்ளன. அவற்றை நிரப்ப வடமாகாணத்தில் ஆட்சேர்ப்பு என்பது சவாலாகவே காணப்படுகிறது. மாணவர்கள் விஞ்ஞான மற்றும் கணித துறைகளை தெரிவுசெய்யாமையே இதற்கு காரணமென மாகாண ஆளுநர் பீ. எஸ். எம் ச்சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 31, 2020 14:35

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo