நாளை முதல் தேசிய கொடியை ஏற்றுமாறு பொதுமக்களிடம் அரசாங்கம் வேண்டுகோள்
Related Articles
நாளை முதல் எதிர்வரும் 7ம் திகதி வரை தேசிய கொடியை ஏற்றுமாறு பொதுமக்களிடம் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ம் திகதி இலங்கையின் 72வது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு வீடுகள், நிறுவனங்கள் போன்றவற்றில் தேசிய கொடியை ஏற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 4ம் திகதி சுபநேரமான காலை 8.30க்கு நாடு முழுவதிலும் மரக்கன்றுகளை நடும் வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படும். அதற்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு பொதுமக்களிடம் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மரக்கன்று ஒன்றை நட்டு சூழலுக்கு அனுகூலமான செயற்பாட்டில் ஈடுபடுமாறு அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.