fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொரோனா தொடர்பாக வீண் அச்சம் கொள்ளதேவையில்லை : நோய் தாக்கினால் சிகிச்சை வழங்க முடியுமென சுகாதார பிரிவு வலியுறுத்து

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 31, 2020 13:32

கொரோனா தொடர்பாக வீண் அச்சம் கொள்ளதேவையில்லை : நோய் தாக்கினால் சிகிச்சை வழங்க முடியுமென சுகாதார பிரிவு வலியுறுத்து

கொரோனா வைரஸ் தொடர்பாக தேவையற்ற விதத்தில் அச்சம் கொள்ள தேவையில்லையென சுகாதார பிரிவு வலியுறுத்தியுள்ளது. இனங்காணப்பட்ட நோயாளி தற்போது தேரியுள்ளார். மேலும் நோயாளர்கள் இனங்காணப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை வழங்குவதில் எவ்வித பிரச்சினையும் இல்லையென சுகாதார பிரிவு வலியுறுத்தியுள்ளது.

உஹான் நகரிலுள்ள இலங்கை மாணவர்களும் நலமாகவுள்ளனர். இதேவேளை கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 213 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 10 ஆயிரம்பேர் இத்தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.

கொரோனா வைரஸ் இலங்கையில் பரவவில்லையெனசுகாதார பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. மக்களுக்கு தமதுஅன்றாட பணிகளை மேற்கொள்வதில் எவ்வித பிரச்சினைகளும் இல்லை. நோய் தாக்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட சீன பெண்னிடமிருந்து வேறு எவருக்கும் இந்நோய் பரவக்கூடிய சாத்தியம் இல்லையென சுகாதார பிரிவு மேலும் வலியுறுத்தியுள்ளது.

சீனாவின் உஹான் நகரிலுள்ள இலங்கை மாணவர்களுக்கு கொரோனா வைரஸினால் எவ்வித பாதிப்பும் இல்லையென சீனாவிற்கான பதில் இலங்கை தூதுவர் கே.கே.யோகநாதன் தெரிவித்துள்ளார். அம்மாணவர்களைஇலங்கைக்கு வரழைப்பது தொடர்பாக துரிதமாக சாதகமான பதில் கிடைக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் இந்நாட்டில் பரவுவதை தடுப்பதற்காக நெனோ தொழில்நுட்பம் அடங்கிய புதிய மென்பொருள் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

முக கவசங்களை அணிய தேவையில்லை. இருந்த போதிலும் சகலரும் அதனை கொள்வனவு செய்ய முற்படுவதன் காரணமாக நாடு பூராகவும் முக கவசங்களுக்கான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஒரு சில மருந்தகங்களில் அதன் உரிமையாளர்கள் முக கவசங்களை கூடிய விலைக்கு விற்பனை செய்ததனால் 15 ரூபா உத்தரவாத விலையை அரசாங்கம் நிர்ணயித்தது. எவ்வாறாயினும் தற்போது முக கவசங்களுக்கான எவ்வித தட்டுப்பாடும் இல்லையென தனியார் மருந்தக உரிமையாளர்களின் சங்கம் கொழும்பில் நடாத்திய ஊடக சந்திப்பின் போது தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 31, 2020 13:32

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க