192 கிலோ கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் நேற்று கைது செய்யப்பட்ட 3 சந்தேக நபர்களையும் 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரிப்பதற்கு நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியது.
192 கிலோ கிராம் ஹெரோயின், 10 துப்பாகிகள் மற்றும் 10 ரவை பெட்டிகளுடன் 3 சந்தேக நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர். ஹொரன பகுதியை வசிப்பிடமாககொண்ட 2 சகோதரர்களும் ஒரு சகோதரரின் காதலியான பெண்ணுமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்கள் பாணந்துறை பதில் மஜிஸ்திரேட் ரமனி டிசேரம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அவர்களை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது.