fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கை – சிம்பாபே டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 30, 2020 14:46

இலங்கை – சிம்பாபே டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று.

இலங்கை – சிம்பாபே அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று ஹராரேயில் ஆரம்பமாகவுள்ளது. நேற்றைய தினம் தமது இரண்டாவது இனிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடியிருந்த சிம்பாபே அணி ஆட்டநேர நிறைவு வரை ஒரு விக்கட்டை இழந்து 62 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. ஏற்கனவே இலங்கை அணி தமது முதல் இனிங்ஸில் நேற்றைய தினம் 293 ஓட்டங்களை மாத்திரம் பெற்று சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

ஏஞ்சலோ மெத்யூஸ் 64 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன மற்றும் ஓசத பெர்ணான்டோ ஆகியோர் தலா 44 ஓட்டங்களையும் பெற்றனர். சிக்கந்தர் ரசா 7 விக்கட்டுக்களை வீழ்த்தினார். ஏற்கனவே சிம்பாபே முதல் இனிங்ஸில் 406 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அதற்கமைய போட்டியில் 175 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 30, 2020 14:46

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க