ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைத்துவத்தை தீர்மானிக்கும் செயற்குழுக்கூட்டம் இன்று

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 30, 2020 13:29

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைத்துவத்தை தீர்மானிக்கும் செயற்குழுக்கூட்டம் இன்று

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் இன்றைய தினம் இறதி தீர்மானம் எட்டப்படுமென கட்சியின் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று மாலை 03.00 மணிக்கு இடம்பெறவுள்ளது. பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்களின் விருப்பத்திற்கமைய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தலைமைத்துவம் தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக அகிலவிராஜ் காரியவசம் குறிப்பிட்டார். நேற்று கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தலைவர் பதவி தொடர்பான அனைத்து கலந்துரையாடல்களும் இன்றைய தினம் செயற்குழுவில் இடம்பெறும். பெரும்பான்மையான உறுப்பினர்களின் விருப்பத்திற்கமைய ஜனநாயக ரீதியாக தலைவர் தெரிவு இடம்பெறுமெனவும் கட்சியின் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை எதிர்வரும் தேர்தலில் பரந்த கூட்டமைப்பில் களமிறங்குவது தொடர்பில் பல தரப்பினரும் யோசனைகளை முன்வைத்துள்ளனர். எவ்வாறெனினும் அது தொடர்பான இறுதி தீர்மானம் மத்திய செயற்குழு கூட்டத்தின் போதே மேற்கொள்ளப்படுமென கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 30, 2020 13:29

Default