fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

IDH வைத்தியசாலையில் உள்ள 10 பேருக்கும் கொரோனா தொற்றவில்லை : சுகாதார பிரிவினர் வலியுறுத்து

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 30, 2020 13:11

IDH வைத்தியசாலையில் உள்ள 10 பேருக்கும் கொரோனா தொற்றவில்லை : சுகாதார பிரிவினர் வலியுறுத்து

தேசிய தொற்று நோய் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் 10 பேரின் மாதிரிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட போது அவர்கள் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குட்படவில்லையென உறுதி செய்யப்பட்டது. கொரோனா வைரஸ் தாக்கிய சீன பெண்மனி மாத்திரமே இதுவரை இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பிரதான தொற்று நோய் பிரிவின் வைத்திய நிபுணர் சுதத்சமரவீர தெரிவித்துள்ளார்.

அங்கொட தேசிய தொற்று நோய் பிரிவில் தற்போது சந்தேகத்திற்கிடமான 18 நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது இவர்களில் 11 பேரின் மாதிரிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன் சீன பெண்மனியை தவிர ஏனையோர் கொரோனா வைரஸ்தாக்கத்திற்குட்படவில்லையென உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

“ஐடிஎச் வைத்தியசாலையில் இதுவரை 18 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ள 18 பேரில் 11 பேரிடம் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் உள்ளதாக என கண்டறிவதற்காக அவர்களது இரத்த மாதிரிகள், பரிசோதிக்கப்பட்டுள்ளன. அதில் ஒருவரது மாதிரிகள் மட்டுமே வைரஸ் தொற்றுடன் பொருந்தியது. எஞ்சிய 10 பேரின் மாதிரிகளும், கொரோனா வைரஸூடன் தொடர்புபடவில்லையென்பது உறுதியானது.”

இதேவேளை கொரோனா வைரஸ் குறித்து மேற்கொள்ளப்படுகின்ற ஆய்வு நடவடிக்கைகளுக்குதேவையான எந்தவொரு பங்களிப்பையும் வழங்க தயார் என கண்டி தேசிய அடிப்படை கல்வியியற் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் குறித்து சுற்றுலா துறை சார்ந்தோரை அறிவுறுத்தும் சந்திப்பொன்று பாணந்துறை பகுதியில்இடம்பெற்றது. களுத்துறை, வாத்துவ , பாணந்துறை, ஆகிய பகுதிகளில் சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர்கள் உள்ளிட்டஅத்துறை சார்ந்தோர் அச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 30, 2020 13:11

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க