கொரோனா வைரஸ் தாக்கத்திற்குட்பட்டவர்களை இனங்காண்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் வசதிகளை மேலும் விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீனாவில் இருந்த இலங்கை மாணவர்கள் குழுக்களாக நாடு திரும்பினர். சீனாவின் பெய்ஜிங் நகரிலுள்ள 50 இற்கும் கூடுதலான இலங்கை மாணவர்கள் இன்று அதிகாலை நாடு திரும்பினர்.
வூஹான் நகரம், தொடர்ந்தும் அச்சுறுத்தல்மிகுந்த வலயமாக பிரகடகப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு இலங்கை மாணவர்கள் உட்பட அவர்களது குடும்பத்தினர் அடங்கலாக 33 பேர் உள்ளனர். இவர்களை தாயகம் அழைத்து வருவதற்காக ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று இன்று அல்லது நாளை அங்கு தரையிறக்வதற்கான அனுமதி கோரப்பட்டுள்ளது. இருப்பினும் சீன அரசாங்கத்திடமிருந்து அதற்கான அனுமதி கிடைக்கப்பெறவில்லை. சீனா அரஙாக்த்திற்கும் ஹூபை பிராந்திய அரசிற்கும் எமது மாணவர்கள் தொடாபான தகவல்களை வழங்கியுள்ளதுடன், அவர்களுக்கு தேவையான வசதிகளை முடிந்தளவில் ஏற்படுத்திக்கொடுக்குமாறு கோரியுள்ளோம். நேற்றைய தினம் பேஜிங்கில் உள்ள இலங்கை தூதுவராலயத்தினால், மாணவர்களுக்கு சில மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்ப்டடன. அதில் சில மாணவர்களுக்கு உடல் உஷ்ணம் தொடர்பான பிரச்சினை இருந்தது. மேலும் சிலருக்கு உணவு குடிநீர் மற்றும் விட்டமின் மாத்திரைகளும் வழங்கப்பட்டன.
சீனாவின் உஹான் மாநிலத்திலுள்ள இலங்கை மாணவர்களை வரவழைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன.
இம்மாணவர்களை அழைத்து வருவதற்காக அம்மாநிலத்தில் விமானம் ஒன்றை தரையிறக்குவதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான பேச்சுவார்த்தை இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.
உஹான் மாநிலத்திலுள்ள இலங்கை மாணவர்களின் பெற்றோர் கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் ஸ்தாபன அலுவலகத்தில் மஹஜர் ஒன்றை இன்று கையளித்தனர். தமது பிள்ளைகளை நாட்டுக்கு வரவழைப்பதற்காக இலங்கை அரசாங்கம் முன்னெடுள்ள வேலைத்திட்டங்களுக்கு ஆதரவு வழங்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.