கொழும்பு மாவட்ட அபிவிருத்த்p குழு கூட்டம் அமைச்சர்கள் பலரது பங்கேற்றலுடன் இடம்பெற்றது.
கொழும்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது. அமைச்சர்களான பந்துல குணவர்தன , தினேஷ் குணவர்தன, ராஜாங்கஅ மைச்சர்களான சுசில் பிரேம் ஜயந்த் , காமினி லொக்குகே, மற்றும் திலங்க சுமதிபால, கொழும்பு மாவட்ட செயலாளர் சுனில்கன்னங்கர உள்ளிட்ட பலரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
மக்களின் அன்றாட நடவடிக்கைகளை பாதிக்கும் பிரச்சினைகள் மற்றும் பொது வசதிகளை கட்டியெழுப்புதல் தொடர்பான வேலைத்திட்டங்கள் குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.