fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பிறந்தநாள் வாழ்த்து கூறி காதலரை அறிவித்த நடிகை

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 29, 2020 11:29

பிறந்தநாள் வாழ்த்து கூறி காதலரை அறிவித்த நடிகை

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்த நடிகை பிரியா பவானி சங்கர், ‘மேயாத மான்’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற வெற்றி படங்களில் நடித்தவர் இப்போது, ‘பொம்மை, வான், மாஃபியா, குருதி ஆட்டம்’ உட்பட  படங்களில் நடித்து வருகிறார்.

பிரியா பவானி சங்கர், நீண்ட காலமாகவே தனது கல்லூரி கால நண்பரை காதலிப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அதை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இருப்பினும் அவருடன் இருக்கும் போட்டோக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார்.

பிரியா பவானி சங்கர் இந்நிலையில் அந்த நண்பருடன் இருக்கும் போட்டோவை பதிவிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறியிருக்கும் பிரியா, கூடவே நட்பு, காதல் கலந்த ஒரு செய்தி வெளியிட்டுள்ளார்.

அதில், 10 ஆண்டுகளுக்கு முன் கல்லூரி காலத்தில் மகிழ்ச்சியான, நம்பிக்கை உள்ள, கவர்ச்சி இல்லாத சுமாரான அழகுடன் இருந்த என்னை, நீ காதலித்த போது எனக்கு ஆச்சர்யாக இல்லை. ஆனால் இப்போதும் அதே அன்புடன் நீ என்னுடன் இருப்பது ஆச்சர்யமாக உள்ளது. உடைந்து போன ஒன்றை ஒன்று சேர்ப்பது என்பது வேடிக்கையான உற்சாகமான விஷயம் அல்ல. நீ, நான் கேட்க மறந்த இசை. எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தா அவள் வாழ்க்கைல உன்னை மாதிரி ஒரு ஆண் இருக்கனும்னு நான் கடவுளை கேட்டுக்கிறேன். நட்சத்திரங்கள் நிறைந்த என் உலகில் நீதான் என் சூரிய ஒளியாக இருக்கிறாய். பிறந்தநாள் வாழ்த்துகள் மா… இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

அத்துடன் சமீபத்தில் கூட இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா உடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார். ஆனால் இதை மறுத்து சூர்யா பதிவிட்டார்.என்பது குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 29, 2020 11:29

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க