சஹ்ரானுடன் ஆயுதபயிற்சி பெற்ற 61 பேர் தொடர்ந்து விளக்கமறியலில்..
Related Articles
தேசிய தௌஹித் ஜமாஅத்அமைப்பில் இணைந்து ஆயுத பயிற்சி பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 61 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நுவரெலியாவில் அமைந்திருந்த தேசிய தௌஹித் ஜமாஅத் அமைப்பின் அதன் தலைவர் மொஹமட் சஹ்ரானுடன் இணைந்து ஆயுத பயிற்சி பெற்றதாகவே இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் காத்தான்குடி பகுதியை சேர்ந்தவர்கள். உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்’து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இவர்கள் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்களை எதிர்வரும் 14 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.