fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கை – சிம்பாப்பே அணிகளுக்கிடையிலான இரண்டாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 27, 2020 13:13

இலங்கை – சிம்பாப்பே அணிகளுக்கிடையிலான இரண்டாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று

இலங்கை மற்றும் சிம்பாப்பே அணிகளுக்கிடையிலான இரண்டாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது. சிம்பாப்பேயின் ஹராரே மைதானத்தில் பிற்பகல் 01.30 மணியளவில் போட்டி இடம்பெறும்.

இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கையணி 10 விக்கட்டுகளால் வெற்றிபெற்றது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றும் நோக்குடன் இன்றைய தினம் இலங்கையணி களமிறங்கவுள்ளது. எனினும் சொந்தமண்ணில் விளையாடும் சிம்பாப்பே அணி, இறுதி டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமன்செய்யும் நோக்கில் களமிறங்கவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கையணி வீரர்கள் துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயற்பட்டனர். எஞ்சலோ மெத்யூஸ் இரட்டைச் சதமடித்து அணியை வலுப்படுத்தினார். இந்நிலையில் முதல் போட்டியில் விளையாடிய இலங்கையணி வீரர்களே இன்றைய போட்டியிலும் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 27, 2020 13:13

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க