சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்வதற்கு உச்சகட்ட முயற்சி : அமைச்சர் பிரசன்ன ரணதுங்க
Related Articles
சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்வதற்கு உச்சகட்ட முயற்சிகளை மேற்கொள்ளபோவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். சுற்றுலா துறை அமைச்சு மற்றும் மாகாண சபைகளிடையே சுற்றுலா துறை தொடர்பான ஒத்துழைப்புக்களை விருத்தி செய்யும் நோக்கில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் குறிப்பிட்டார்.
இலங்கை சுற்றுலா அதிகார சபை, சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சு இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தது. இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ உட்பட மாகாண ஆளுநர்களும் இதில் இணைந்திருந்தனர்.